கம்பாலபட்டி ஊராட்சியில் மகளிர் தின விழா
பொள்ளாச்சியை அடுத்த கம்பாலபட்டி ஊராட்சியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சியை அடுத்த கம்பாலபட்டி ஊராட்சியில். தமிழ்நாடு உழைக்கும் மகளிர் முன்னேற்ற இயக்கம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கம்பாலபட்டி ஊராட்சித் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு உழைக்கும் மகளிர் முன்னேற்ற இயக்க ..தலைவர் மலர்விழி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி கலந்துகொண்டு, சிறந்த சமூக சேவையாற்றிவரும் பெண்களுக்கு சான்றிதழ்களையும், ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதில் கோட்டூர் துரை, அ.தி.மு.க. மகளிரணி மாவட்ட துணைச்செயலாளர் ஜெயந்தி, உழைக்கும் மகளிர் முன்னேற்ற இயக்க செயலாளர் திலகராணி,
பொருளாளர் காளீஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.