ஆறு வயது சிறுமியிடம் அத்துமீறல்: ஓய்வு பெற்ற ஆசிரியர் கைது.
6 வயது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது.
பொள்ளாச்சி நகர பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் எபினேசர். இவருக்கு வயது 77 ஆகும். அதே பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுமியின் தந்தை எபினேசரின் குடும்ப நண்பராவார். இந்நிலையில் நேற்று காலை சிறுமியின் பெற்றோர் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது நண்பரின் வீட்டிற்குச் சென்ற எபினேசர் சிறுமியை மடியில் அமர வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த பெற்றோர், அழுது கொண்டிருந்த சிறுமியிடம் விசாரித்த போது, எபினேசர் சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டது தெரியவந்தது. சிறுமியின் பெற்றோர் இன்று பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் எபினேசர் சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் எபினேசரை கைது செய்து, கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.