அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் திருட்டு
நாகை அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் இருந்து 47 நெல் மூட்டைகள் திருட்டு.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரை அடுத்துள்ள பட்டமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 8000 நெல் மூட்டைகள் வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நேற்றிரவு வழக்கம்போல் பணியை முடித்த ஊழியர்கள் கொள்முதல் நிலையத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை கொள்முதல் நிலையத்திற்கு வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் நிலையத்தின் முகப்பு கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த பட்டியல் எழுத்தர் சக்திவேல், உள்ளே சென்று பார்த்த பொழுது கொள்முதல் செய்து வைத்திருந்த 38 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 47 நெல் மூட்டைகள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. பின்னர் சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் ராஜேஷ்,
நாகை மாவட்டம்,