சமூக நல்லிணக்க இப்தார் விருந்து
பொள்ளாச்சி முதலுதவி சமூகநல அறக்கட்டளையின் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் விருந்து நடைபெற்றது.
பொள்ளாச்சியில் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் முதலுதவி சமூகநல அறக்கட்டளையின் சார்பில்
சமூக நல்லிணக்க இப்தார் விருந்து சி.டி.சி. டிப்போ எதிரில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.
அறக்கட்டளையின் தலைவர் இக்பால், பொதுச் செயலாளர் அர்சத் முபின் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக
நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், சமூக நல்லிணக்க குருமார்கள் மாரநாதா சபை பாஸ்டர் சகரியா தமிழ்மாறன், ஆ.சங்கம்பாளையம் உலவிய்யு இமாம் மௌலவி சையது சுல்தான் அலி, ஜீவ முக்தி சிவாலயம்
சிவஸ்ரீ விக்னேஷ் சிவம், கோட்டூர் பேரூராட்சி கவுன்சிலர் அப்துல் அஜீஸ்,
முக்கனி மனிதநேய அறக்கட்டளை இஸ்மாயில், மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் தலைவர் ஷெரீப், பொருளாளர் பார்த்தசாரதி, முதலுதவி சமூகநல அறக்கட்டளையின் சட்ட ஆலோசகர் வக்கீல் பஞ்சலிங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.