வரி சீராய்வில் மறுபரிசீலனை
கொ.ம.தே.க. கோரிக்கை
பொள்ளாச்சி நகராட்சி பொது வரி சீராய்வில் மறுபரிசீலனை செய்திட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளர் நித்தியானந்தன், கவுன்சிலர் சாந்தலிங்கம் உள்ளிட்டோர் பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி மற்றும் நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர். அதில், பொள்ளாச்சி நகராட்சியில் கடந்த 1998ம் ஆண்டு நடந்த
அப்போதைய நகராட்சித் தலைவரால்
நகரமன்றத்தில் தீர்மானிக்கப்பட்ட பொது வரி சீராய்வில் உச்சபட்ச வரித்தொகை
நிர்ணயம் செய்து பொது மக்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டது.
அப்போது மற்ற நகராட்சியில் உள்ள சொத்துவரியைக் காட்டிலும் பல மடங்கு
அதிகமாக பொள்ளாச்சி நகராட்சியில் சொத்துவரி நிர்ணயம் செய்யப்பட்டது.
அதனால் பொது மக்களும், வியாபார, வணிக நிறுவனங்களைச் சேர்ந்த
உரிமையாளர்களும், சொத்து வரி உயர்வால் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
தற்சமயமும் பொள்ளாச்சி நகராட்சியில் தான் சொத்து வரி அதிகமாக உள்ளது.
எனவே தற்சமயம் நடைபெற உள்ள பொதுவரி சீராய்வை மறுபரிசீலனை செய்து பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் உதவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.