தென்காசி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் இந்த மாவட்டத்தின் சிறப்பு மலைகளும் அருவிகளும் விவசாய நிலங்களும் தான்
நெல்லை மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து தென்காசி மாவட்டமாக உருவாகியது இந்த மாவட்டத்தின் நான்காவது ஆட்சியாளராக ஆகாஷ் நியமிக்கப்பட்டார்.
நியமிக்கப்பட்ட நாளிலிருந்து ஓயாமல் மாவட்டம் முழுவதும் சுற்றி திரிந்தார் பின்னர் மாவட்ட மக்களின் தேவைகள் என்னவென்று அறிந்த பிறகு தமது பணியை துவக்கினார்
மாவட்ட மக்களின் பிரதான தொழில் விவசாயம் என்பதை அறிந்து அவர்கள் வாழ்வாதாரத்தை பெருக்கும் விதமாக அவர்களது இன்னல்களை துடைக்கும் விதமாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்
இயற்கை எழில் கொஞ்சும் மலைகளில் இருந்து பருவநிலை மாற்றம் காரணமாகவோ பருவநிலையின் போதோ பொழியும் மழையின் நீர் வரத்துகளை வழிமறித்து அவற்றை குதூகலமாக குளிப்பதற்காகவும் அவற்றை வைத்து பணம் பார்ப்பதற்காகவும் தனியார்கள் சிலர் அருவிகளாக செயல்படுத்தி வந்தனர் மேக்கரை பகுதிகளில் இதனால் விவசாயத்திற்கு செல்லக்கூடிய நீர்நிலைகள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் துன்புற்று வந்தனர்
மேலும் சமீபத்தில் குற்றால நீர்வீழ்ச்சியில் அதிக அளவில் நீர் வரத்து காரணமாக அருவியில் குளித்து கொண்டு இருந்த சிலர் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டு உயிரிழந்தனர் இதனால் கவலையுற்ற மாவட்ட ஆட்சியர்
நீர் நிலைகள் தனியார் நபர்களால் தடை செய்யபட்டதன் விளைவாக ஏற்பட்ட விபத்து இது என உணர்ந்த பிறகு மேக்கரை பகுதியில் உள்ள தனியார் அருவிகள் அனைத்தையும் களைஎடுக்க துங்கினார் இதனால் விவசாயிகள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுவந்தார் விவசாயிகளின் காவலன் என்றும் அழைக்கபட்டார் இந்நிலையில் பினாமிகளை வைத்து அருவிகள் நடத்தும் வட மாவட்டத்தை சேர்ந்த அரசியல்வாதி
(தமிழ் கடவுள் முருகனின் ஆயுதம் சேர்ந்த பெயர் கொண்ட ஒருவர்)மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகளை முடக்கும் விதமாக நடந்து வருகிறார் என குற்றசாட்டு எழுந்துள்ளது விவசாயிகளுக்காக குரல் கொடுப்பேன் என வாய் கிழிய பேசிவரும் இந்த அரசியல்வாதியை நினைத்து வெறுப்படைந்து வருகின்றனர் அப்பகுதி விவசாயிகள் விரைவில் விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் அந்த அரசியல்வாதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறபடுகிறது