தென்காசி மாவட்டம் இடைகால் பஞ்சாயத்துக்கு உட்பட்டு ஒன்பது வார்டுகள் உள்ளன சுமார் ஐநூற்றுக்கும் மேர்பட்ட வீடுகள் உள்ளன இந்த வார்டுகளுக்கு சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளிகளின் எண்ணிக்கை பத்து பேர் உள்ளனர் இதில் ஆறு பேர் தினக்கூலி அடிபடையிலும் நான்கு பேர் நிரந்தர தொழிலாளியாகவும் பணியாற்றுகிறார்கள். போதுமான தொழிலாளர்கள் இருந்தும் சரிவர வீடுகளுக்கு வந்து குப்பைகளை எடுப்பதில்லை தெருக்களின் எல்லை பகுதியிலே நின்று கொண்டு குப்பைகளை வண்டியில் வந்து போடுமாறு கூறுகிறார்கள் இதனால் வீடுகளில் தனியாக இருக்கும் முதியோர்களுக்கு சிரமமான சூழ்நிலை உள்ளது மேலும் வீட்டிற்கு வீடு வாரத்திற்க்கு ஒருமுறை ஐம்பது ரூபாயவரை கறாராக வசூல் செய்து விடுகின்றனர் குறைவாக கொடுக்கும் வீடிகளில் குப்பைகளை எடுப்பதில்லை இதனால் இப்பகுதிமக்கள் பெரும் அவஸ்தைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள் சிறு சிறு கிராமங்களில் உள்ள பஞ்சாயத்துக்கள் பல முன்மாதிரியான பஞ்சாயத்து என பாராட்டுகளையும் பெற்று நம் மாநிலத்திற்கு பெருமை சேர்த்து அனைவரது பாராட்டுதலையும் பெற்றுவருகிறது ஆனால் இங்கோ…?
மாவட்ட நிர்வாகம் கிராம பஞ்சாய்துக்களின் நடவடிக்கைகள் குறித்த கவணம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்பாக உள்ளது