கரூர்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு,கரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று இரவு மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட 60 ஆயிரம் கன அடி தண்ணீரில் இன்று(அக்.14) காலை 8 மணி நிலவரப்படி, வினாடி ஒன்றுக்கு மாயனூர் கதவணைக்கு 52,364 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாயனூர் கதவணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 51 ஆயிரத்து 444 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாயனூர் காவிரி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ,மின் பிடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மாயனூர் கதவனை பகுதியில் பொதுப்பணித்துறை கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மோகன்ராஜ் தலைமையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.