தென்காசி கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023 ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு.
கலந்தாய்வு மூலம் சேர எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் (www.skilltraining.tn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக 24-5-2023 முதல்பெறப்பட்டு வருகிறது.தற்போது அதற்கான கடைசி தேதி 20 6 2023 வரை எனக் கால நீட்டிப்புசெய்யப்பட்டு உள்ளது.இந்நிலையங்களில் ஈராண்டு தொழிற் பிரிவுகளான பொருத்துனர் (Fitter),மின்சாரப் பணியாளர் (Electrician),கம்மியர் மோட்டார் வாகனம் (Mechanic Motor Vehicle),கம்பியால் (Wireman),மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவுகளான கம்மியர் டீசல் (Mechanic Diesel),பற்றவைப்பவர் (Welder),பம்ப் மெக்கானிக் (Pump Operator cum Mechanic)ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.மேலும் தொழில்நுட்ப மையம் 4.0 திட்டத்தின் கீழ் இராண்டு தொழிற்பிரிவுகளான மேம்பாட்டு திட்டப்படி மேம்படுத்தப்பட்ட CNCஇயந்திர தொழில்நுட்ப வல்லுனர் (Advanced CNC Machning Technician – SCVT) கம்பியர் மின்சார வாகனம் (Mechanic Electric vehicle – SCVT) மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளான தொழில்துறை ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுனர் (Industrial Robotics and digital Manufacturing Technician – SCVT) தொழில்துறை இயக்க கட்டுப்பாடு மற்றும் தானியக்கம் (Manufacturing process Control and Automation) ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பயிற்சியில் சேருவோருக்கு அரசு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.750/-, விலையில்லா மடிக்கணினி, மதிவண்டி, சீருடைகள், தையல் கூலி, மூடுகாலணிகள், பாடப் புத்தகங்கள், வரைபட கருவிகள், இலவச பஸ் பாஸ், சலுகை கட்டண ரயில் பாஸ், ஆகியன வழங்கப்படும்.மேலும் உணவு வசதியுடன் கூடிய விடுதி வசதி உண்டு.
மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூரை நேரிலும், 04633 – 280933, 04633 – 277962, 04633- 290270 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆசிரியர் திரு.துரை. இரவிச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.