கரூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக நீண்ட நேரமாக வரவேற்பதற்கு நின்று கொண்டிருந்த மாணவிகளும் – சைக்கிள் பெறுவதற்காக வெயிலில் அமர வைக்கப்பட்ட மாணவ – மாணவிகள் – விடியா திமுக கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி வந்தவுடன் செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை கண்டவுடன் அவர்களை நிழலில் அமர வையுங்கள் என்று கூறினார்.
கரூர் மாவட்டம், புலியூர் அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற விடியா திமுக அரசின் உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்து கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகள் 208 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக பள்ளி வளாகத்தில் முன்பு மாணவிகள் நீண்ட நேரம் வரவேற்பதற்காக நின்று கொண்டு கர்சிப்பல் வேர்வையுடன் முகத்தை துடைத்துக் கொண்டு காத்துக்கொண்டிருந்தனர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்திற்குள் மாணவ, மாணவிகள் இருக்கையில் வெயிலில் அமர வைக்கப்பட்டிருந்தனர். மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திமுக கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை கண்டு உடனே வெயிலில் அமர்ந்திருந்த மாணவ – மாணவிகளை எழுந்து நிழல் உள்ள பகுதியில் அமருமாறு அறிவுறுத்தினார்.
முன்னதாக மாணவர்கள் எம்எல்ஏ சிவகாமசுந்தரி அவர்களுடன் வந்த திமுக நிர்வாகிகள் அமர்வதற்காக இருக்கைகளை மாணவர் எடுத்துக்கொண்டு ஷேர் போடுவதற்காக ஆசிரியர்களின் உத்தரவின் பேரில் தூக்கிச் சென்ற காட்சிகள் அரங்கேறி உள்ளது.
மேலும் இலவச சைக்கிள் வழங்குகின்றனர் என்ற பெயரில் இன்று காலை முதல் மதியம் 12 மணி உணவு இடைவேளை வரை பள்ளி மாணவர்களின் படிப்பினை பாதிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை செய்து வரும் விடியா திமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது.