திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டை அடுத்த சின்ன புவியூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியில் இருசக்கர வாகனம் ஏறியதால் ராவனய்யா, ரமேஷ் ஆகிய இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

