மாலை நேரம் மலையடிவாரம் இருசக்கர வாகனத்தில் தமது மனைவி மற்றும் ஓரு வயது மகனுடன் பயணித்தார் சிவக்குமார்
வீட்டில் தீபாவளித்திருநாளை கொண்டாடிய சிவக்குமார் தமது தோட்டத்திற்க்கு சென்றுள்ளார்..
சரக்கும் முறுக்கும் என சைடிஸ்களோடு ஒரு கும்பல் தோட்டத்தின் முன்னே காத்திருந்தது
காத்திருப்பது தம்மை பலி கொள்ளும் எமன்களின் கூட்டம் என தெரியாமல் அவர்களை கண்டித்துள்ளார் சிவகுமார்
அங்கிருந்து சரக்கு கும்பல்கள் கலைந்து போனார்கள்
தமது மனைவி காளீஸ்வரி மற்றும் ஒருவயது மகனுடன் ஆயிரம் கணவுகளோடு தோட்டத்திற்க்கு சென்றார்
ஒருமணி நேரமாக தோட்டத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த போது
அதே கும்பல்கள் இப்போது கையில் சரக்கும் இல்லை முறுக்கும் இல்லை
கொடுவாளும் கத்தியும் கையில் பளபளத்தது
பதறிய சிவக்குமார் அவர்களிடம் இருந்து தமது குடும்பத்தினருடன் தப்பிச்செல்ல முற்ச்சிக்க..
கழுத்தில் ஆழமாக இறங்கியது சரக்கு கும்பலின் கையில் வைத்திருந்த கொடுவாளும் கத்தியும்
ஒருவயது குழந்தை மனைவி கண் எதிரே சரிந்து விழுந்தார் சிவக்குமார்
அலறி துடித்தார் காளீஸ்வரி அக்கம் பக்கம் யாருமில்லை கதறல் சப்தம் யாருக்கும் கேட்கவில்லை தமது கை குழந்தையை தூக்கி கொண்டு கதறியவாரை இராஜபாளையம் தெற்கு காவல்நிலையம் சென்று நடந்தவைகளை கூறியுள்ளார் காளீஸ்வரி
இப்படித்தான் காவல்நிலைய வாக்குமூல கதைகள்..
முதல் மனைவி ஒரே சமூகம்தான் ஒரு குழந்தை உண்டு
ஆனாலும் விவாகரத்து பெற்றுவிட்டார்
இரண்டாவது திருமணம் தமது கடையில் வேலை பார்க்கும் பணிப்பெண் மணப்பெண்னாக ஆனார் காளீஸ்வரி
இந்த முறை வேறு சமூகம்
வகை தொகையான சொத்துக்கள குடும்ப வாரிசுகளில் சிவக்குமார் மட்டுமே மிச்சம் அதுவும் நேற்றோடு அவரது கதையை முடித்து விட்டனர் சரக்கு கும்பல்கள்
வாரிசு இல்லா சொத்தினை ஆள்வதற்க்கா இழந்த சொத்தினை மீட்பதற்க்கா எதனால் இந்த கொலை எப்படி நடந்தேறியது. குற்றவாளிகள் யார்..என பல கேள்விகளுக்கு போலீசாரின் விசாரணையின் முடிவே இறுதியான க்ளைமாக்ஸ்!