கடையம் அருகே இரு குளங்களின் கரை உடைப்பு 200 ஏக்கர்நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் கடையம் பகுதியில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. இதனால் ராமநதி அணை மூலம் பாசனம் பெறும் பரந்தாமன்குளம் மற்றும் நைனா குளம் ஆகிய இரு குளங்கள் உள்ளது. இந்த இரு குளங்களின் மூலம் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.தற்போது தொடர் மழை காரணமாக பரந்தாமன் மற்றும் நைனாகுளம் நிரம்பி அதனுடைய குளக்கரைகள் உடைந்தன. இதனால் பொட்டல் புதூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.இது பற்றி அப்பகுதியை சேர்ந்த விவசாயி அணைக்கரை செண்டு கூறுகையில்தற்போது இந்த பகுதியில் நான் 10 ஏக்கரில் நெல் பயிரிட்டு உள்ளேன். தொடர் மழை காரணமாக குளக்கரைகள் உடைந்து நெல் பயிர்கள் அழுகின ஒரு ஏக்கர் நெல் பயிர் செய்வதற்கு ரூ 25 ஆயிரம் வரை செலவு செய்தேன். தற்போது அனைத்து நெல்பயிரும் சேதமானது எனவே அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் , என்னை போல் பல விவசாயிகள் பயிரிட்டுள்ள சுமார் 200 ஏக்கர் விவசாய நெல்பயிர்கள் சேதமானது என்றார்.தொடர்ந்து தகவல் அறிந்த பொட்டல்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் நெல் சேதங்களை பார்வையிட்டார். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரவிந்தராஜ், மாடசாமி, பாலசுப்பிரமணியன், சோமசுந்தரம், முருகேசன், வேல்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்
Read Next
க்ரைம்
23 hours ago
மான் வேட்டை – 4 பேர் கைது
விமர்சனங்கள்
2 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
23 hours ago
மான் வேட்டை – 4 பேர் கைது
2 days ago
வாக்கி டாக்கி இருக்கு – ஆனா பேசத்தான் முடியாது – பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் காலி
2 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
3 days ago
தேனீக்கள் கடித்து ஒருவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
3 days ago
வெட்டுகத்தியால் காட்டு பன்றியை வேட்டையாடிய நபர் – வெட்டுகத்தியுடன் கைது
5 days ago
*வன நிலங்கள் விற்பனைக்கு – கூவி கூவி விற்கும் புரோக்கர்கள் – வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை மற்றும் வனத்துறை*
5 days ago
சேரன்மாகாதேவியில் ஆட்டோ கவிழ்ந்து அரசு பள்ளி மாணவி பலியான சோகம்
6 days ago
மக்கள் நடமாடும் பகுதிகளில் சுற்றி வந்த கரடியை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
6 days ago
“பதில் சொல்லுங்க…” – திமுக ஆர்ப்பாட்டத்தில் அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!
1 week ago
கடத்த முயன்ற மண்ணுளி பாம்பு – ரோந்து போலீசார் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
Related Articles
Check Also
Close
-
மீனவர்களை மீட்க பாமக தலைவர் வலியுறுத்தல்November 28, 2024