உதகை மிஷனரி ஹில் பகுதியில் குடியிருப்பை ஒட்டிய வனத்தில் வெள்ளிக்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டது . நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகளில் மரம், செடி, கொடிகள் என அனைத்தும் காய்ந்து வறட்சி நிலவி வருகிறது.இந்நிலையில் உதகை மிஷனரி ஹில் பகுதியில் குடியிருப்பை ஒட்டிய வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை காட்டு தீ ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.இதைத் தொடா்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் 2 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.”
