க்ரைம்விமர்சனங்கள்

திண்டுக்கல் மாவட்டம் , கொடைக்கானல் வன உயிரின சரணாலயம் , காட்டு தீ

திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமாகவும் , வன உயிரின சரணாலயமாகவும் , மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் முக்கிய பகுதியாகவும் , மலைகளின் இளவரசி என்று பல்வேறு சிறப்புக்களை தன்னுள் கொண்டுள்ள பகுதி தான் கொடைக்கானல் மலை பகுதி .

இங்கு பல வகையான வன உயிரினங்கள் வசிக்கின்றன . இங்குள்ள குளிச்சியானது வருடம் முழுவதும் அனுபவிக்ககூடியதாக உள்ளதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் மிக அதிகம் .

கொடைக்கானல் வன உயிரின சரணாலயம் என்பது பல வனச்சரகங்களை உள்ளடக்கியது . இங்கு கோடை காலத்தில் காட்டு தீ ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே வரை இருக்கும் . இதனை தடுக்கும் பொருட்டு தமிழக வனத்துறை தனியாக நிதி ஒதுக்கி தரும் நிலையில் சென்ற மாதம் (மார்ச்) மட்டும் 200 க்கும் மேற்பட்ட காட்டு தீ தொடர்பான தானியங்கி (செயற்கைகோள் மூலம் கண்டறிந்து ) எச்சரிக்கைகள் வந்துள்ளதாகவும் , பல நூறு ஏக்கர் பரப்பளவில் காட்டு தீ பற்றி எரிந்துள்ளதாகவும் கூறுகின்றனர் .

தமிழக அரசு தேவையான நிதியை ஒதுக்கியும் , சுற்றுலா வருவாய் மூலம் பல கோடி ரூபாய் நிதி இருந்தும் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாக போதுமான தடுப்பு நடவடிக்கைகள் (தற்காலிக காட்டுதீ கண்காணிப்பாளர் , தீ தடுப்பு கோடுகள் ) எதுவும் எடுக்கப்படாததால் தான் இவ்வளவு சேதாரம் ஏற்பட்டுள்ளது என வன உயிரின மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button