சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ₹4 கோடி பறிமுதல். 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த ₹500 நோட்டுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேர் கைது.
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவர் வாக்குமூலம்
இதனை தொடர்ந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புளூ டைமண்ட் ஹோட்டலில் சோதனை
ஹோட்டலில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொண்டு வரும் பறக்கும் படையினர்
சிக்கிய 3 பேரில் ஒருவரான பெருமாள் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என தகவல்