திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் சமரசம் பற்றிய விழிப்புணர்வு அரங்கை முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
மேலும் முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா அவர்கள் சமரச மையத்தில் வழக்காடிகள் தாங்கள் எதிர்தரப்பினருடன் பேச்சுவார்த்தை மூலம் தங்கள் வழக்குகளுக்கு தீர்வு காணலாம் என்பதனையும், சமரசத்தில் வழக்குகளில் எவ்வித மேல்முறையீடு இல்லாமலும், விரைவாகவும் கட்டணம் இன்றியும் தீர்வு காணலாம் போன்ற சமரசம் பற்றிய விவரங்களை வழக்காடிகளுக்கு தெரிவித்தார்.