சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபர் கைது. ரூபாய் 1,05,600 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவன் கோவில் தெருவில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்த பலவேசம் என்பது மகன் கள்ளபிரான் (71) மீது காவல் ஆய்வாளர் திருமதி. மேரி ஜெமிதா அவர்கள் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 1,05,600 மதிப்பிலான 198 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது..