தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் குற்றாலம் வனச்சரகத்தில் புளியரை பிரிவுக்கு உட்பட்ட மோட்டை பிட் – கற்குடி பிட் ஆகிய பகுதியில் காட்டில் தீ அதிக அளவு பரவி கொண்டிருக்கிறது, வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பற்றி எரியும் தீயை அணைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கோட்டை அருகே கற்குடி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ கேரள வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் பரவியதாக வனத்துறை அலுவலர் முருகன் விசில் செய்தியாளரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்