தென்காசி மாவட்டம் தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய கணேசன், கோகிலா தம்பதியின் 7 வயது மகள் ஜெ. முவித்ரா ஸ்கேட்டிங்கில் உலக சாதனை படைத்துள்ளார்
இதற்கான நிகழ்வை சங்கரன் கோவில் சட்டமன்ற அலுவலகம் முன்பிருந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜா துவக்கி வைத்தார்
சங்கரன் கோவில் டூ பணவலி சத்திரம் மற்றும் பணவலி சத்திரம் டூ சங்கரன்கோவில் இடையே ஆன 30 கிலோமீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங் மூலம் ஒரு மணி நேரம் 40 நிமிடத்தில் கடந்து யுனிகோ உலக சாதனை படைத்துள்ளார்
சாதனை செல்வி முவித்ராவை மேலும் இதுபோல் சாதனைகளை குவித்திட அப்பகுதி மக்கள் மனதார பாராட்டினர்