மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக எல்லைக்குள் உள்ள பகுதிகளில் பல இடங்களில் தினமும் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது .
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வன உயிரின சரணாலய பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் மட்டும் 200 – க்கும் மேற்பட்ட காட்டு தீ எச்சரிக்கைகள் இந்திய வன நில அளவை அன்பின் செயற்கைகோள் தானியங்கி காட்டுத் தீ எச்சரிக்கை வந்துள்ளது .
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 300 ஏக்கர் பரப்பளவு இடங்கள் காட்டு தீயினால் அழிந்துவிட்டது எனவும் இந்த இடங்களில் இருந்த வன உயிரினங்களின் நிலை என்ன என்பது குறித்து எந்த வித தகவலும் வனத்துறையினர் வெளியிடவில்லை என வன உயிரின ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
மேலும் கூறுகையில் இந்த ஆண்டு எந்தவித காட்டு தீ கட்டுப்பாட்டு முன்னேற்பாடுகளும் செய்யாமல் விட்டதினாால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும் வேதனை தெரிவித்தனர்