திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் தெருவில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கரடி வந்துள்ளது. இஸ்லாமிய மக்கள் இன்று ரம்ஜான் பண்டிகை என்பதால் அதிக அளவில் பள்ளிவாசல் வந்து தொழுகை நடத்தி திரும்பும் போது அந்த தெருவில் கரடி நுழைந்ததாக தெரிவித்தனர்.
உள்ளே நுழைந்த கரடி ஒரு பெரியவரை தாக்கி விட்டு ஓடியது.போற வழியில் தொழுகைக்கு வந்தவர்கள் நிறுத்தியிருந்த வாகனங்களையும் தள்ளிவிட்டு, அப்பகுதியில் நின்றிருந்த சில வயதானவர்களையும் தாக்கி விட்டு சென்றது.. மக்கள் எல்லோரும் சேர்ந்து காயம்பட்ட பெரியவரை காப்பாற்ற கரடியை விரட்டினர் . அதனால் கரடி வீரப்புரம் தெரு வழியாக போய் கடைசியாக முதலியப்புரம் தெரு கால்வாய் வழியாக தப்பி ஓடியது . அதிகாலை இருட்டாக இருந்ததினால் கரடி எங்கே போனதென்று தெரியவில்லை. ஆகையால் மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள்..