ரூ. 6 கோடிக்கும் அதிகமான நேரடி ரொக்கப் பணம் மற்றும் ரூ. 12 கோடிக்கும் அதிகமான ரொக்கம் திரைப்படத் தயாரிப்புக்காக ஜாஃபர் சாதிக் முதலீடு செய்துள்ளார்.
ஜாஃபர் சாதிக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 21 கோடிக்கும் அதிகமான ரொக்க டெபாசிட்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது
அசையா சொத்துக்களைப் வாங்குவதற்கு “குறிப்பிடத்தக்க” அளவு பணம் பயன்படுத்தப்பட்டது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 40 கோடிக்கும் அதிகமான ரொக்க பண முதலீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ED தெரிவித்துள்ளது.
NCB -ன் கூற்றின்படி சாதிக், போதைப்பொருள் வர்த்தகத்தில் சம்பாதித்த பணத்தை தனது திரைப்படத் தயாரிப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் தொழில் போன்ற வணிகங்களில்” முதலீடு செய்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாஃபர் சாதிக்குடன் தொடர்பில் உள்ள அரசியல்வாதிகள், இந்தி மற்றும் தமிழ் சினிமா, தொழில் சம்பந்தப்பட்ட நபர்களையும் கண்காணித்து வருவதாக NCB தெரிவித்துள்ளது.
இதையொட்டு அமலாக்கத்துறையும் விசாரணையை தொடரும்..