திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அவசர கதியில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது .
திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் நாளை பகுதியில் வாக்கு கேட்டு வருவதை ஒட்டி அவசர அவசரமாக சாலையிடும் பணி நடைபெற்று வருகிறது.
கடைசியாக எங்க சாலை அமைத்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது பலமுறை இப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்தவித சாலை பணியையும் செய்யாதவர்கள் தற்பொழுது தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக தேர்தல் விதிமுறைகளை மீறி இந்த சாலை பணி நடைபெறுவதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.