திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து1000 அடிக்கு போர் போட்டாலும் தண்ணீர் வருவதில்லை, புகைதான் வருகிறது .
இதை கருதி முக்கிய நீர் இல்லா பகுதிகளான குஜிலியம்பாறை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய 3 தாலுகா பகுதிகளை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து போதிய சலுகைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நடப்பாண்டில் காவிரி ஆற்றிலும் தண்ணீர் இல்லாத நிலையில் அங்கிருந்து ராட்சத கிணறுகள் மூலம் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் அதற்கும் இன்னும் ஒரு சில மாதங்களில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.
விவசாயம் பாழ்பட்டு போன நிலையில், கால்நடைகளையும் பார்க்க முடியாமல் அவற்றை குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் குஜிலியம்பாறை, வேடசந்துார், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, நிலவரி , விவசாய கடனுக்கான வட்டி உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புகைப்படம் : file Picture