தென்காசி மாவட்டம், VK புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு காவல் துறையினர் வாகன சோதனையின் போது கள்ள ரூபாய் நோட்டு வைத்திருத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இடையர்தவனை ராமர் என்பவரின் மகன் ஐயப்பன்(37), தாயார் தோப்பு குத்தாலிங்கம் என்பவரின் மகன் சேர்மலிங்கம்(50), ஜான்சன் என்பவர் மகன் மோசஸ் ராஜ்குமார்(44), சங்கரன்கோவில் முருகேசன் என்பவரின் மகன் மணிகண்டன்(57), ராஜபாளையம் சீனி என்பவரின் மகன் வீரபாண்டியன்(57) மற்றும் ராஜபாண்டி சண்முகையா என்பவரின் மகன் ராஜேந்திரன்(52) ஆகியோர் அப்போதைய சுரண்டை காவல் ஆய்வாளர் திரு.பெருமாள் அவர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி திருமதி.மாரீஸ்வரி அவர்கள் குற்றவாளிகளுக்கு தலா 07 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த VK புதூர் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
