கோக்கு மாக்குசெய்திகள்விமர்சனங்கள்
Trending

பார்க்கிங் பிரச்சனை – குறிப்பிட்ட சில வண்டிகளுக்கு மட்டும் அபராதம் விதித்த போக்குவரத்து காவல் துறை அதிகாரி – திருச்செந்தூர்

சம்மந்தபட்ட வாகன உரிமையாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ , அங்கு நடந்ததாக குறிப்பிட்டுள்ள விபரம் :

இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தரிசனத்திற்கு சென்ற போது கடுமையான போக்குவரத்து நெருக்கடி காரணமாக சாலை ஓரத்தில் இரு புறமும் அனைவரும் வேறு வழியின்றி நிறுத்தி வைத்திருந்தனர். அந்த இடம் நோ பார்க்கிங் பகுதியும் கிடையாது.

ஆனால் மேற்கண்ட போக்குவரத்து காவலர் குறிப்பிட்ட ஒரு சில வாகனங்களுக்கு மட்டும் 2500 ரூபாய் அபராதம் ஆன்லைனில் பதிவு செய்து எனது வாகனத்தில் முன் பக்கத்தில் ஒட்டி இருந்தார். இது பற்றி அவரிடம் முறையிட்ட போது அப்படி தான் போடுவேன். உன்னால் முடிந்ததை பார் என்றும் எனக்கு மேலிட உத்தரவு என்று அலட்சியமாக பதிலளித்தார்.

அறநிலையத்துறை அதிகாரிகள் எந்த வித பார்க்கிங் வசதியும் செய்து தராமல் பக்தர்களுக்கு வீண் தண்டம் கட்டுவதற்கு தூண்டுகின்றனர். அறநிலையத்துறை அதிகாரிகளும் போக்குவரத்து காவலர்களும் கூட்டு சதி செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

பகல் கொள்ளையில் ஈடுபடும் திருச்செந்தூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கணேஷ் மணிகண்டன் பக்தர்களிடத்தில் அநாகரிகமாகவும் அறுவறுக்கத்தக்க வகையிலும் பேசி வருவதை உயரதிகாரிகள் கவனத்தில் கொண்டு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button