இன்றைய காலை நிலவரப்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பற்றி எரிவதாக இவற்றை இந்தியா அளவில் செயற்கை கோள் மூலம் கண்காணித்து எச்சரிக்கும் தானியங்கி அமைப்புகள் மூலம் கிடைத்துள்ளது
இந்த ஆண்டின் கோடை காலத்தில் மட்டும் இதுவரை சிறியதும் பெரியதுமாக 300-க்கும் மேற்பட்ட வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டு தீ எச்சரிக்கைகள் வந்துள்ள நிலையிலும் இதுவரை மாவட்ட வனத்துறையினர் இவ்வாறு அதிக அளவில் வனப்பகுதிகளில் ஏற்பட்டு வரும் தீ குறித்து உரிய விசாரணை நடத்தவில்லை என்றும் முன்னெச்சரிக்கை எதுவும் செய்யாமல் விட்டதால் தான் இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் இவ்வளவு காட்டு தீ ஏற்பட்டுள்ளது என்றும் வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .