திண்டுக்கல், நத்தம், பழைய நீதிமன்றம் சந்து கல்மட தெரு பகுதியில் மர்ம நபர்கள் சீத்தாம்மாள் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு,
மேலும் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை
நத்தம் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்