Featuredகோக்கு மாக்குக்ரைம்சுற்றுலாசெய்திகள்விமர்சனங்கள்
Trending

நீலகிரியில் அழுத்தமாக கால் பதிக்கும் தடைசெய்ய பட்ட தண்ணீர் பாட்டில்கள் சுற்றுலா தலங்களில் பயன்பாடு அதிகமென குற்றசாட்டு

மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டால் வனச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை

ஊட்டி:பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு சராசரியாக வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ குறைந்தபட்சம் 100 முதல் 400 ஆண்டுகள். அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக் காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு துர்நாற்றம் வீசுவதற்கும், வெள்ளக்காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் முக்கிய காரணியாக உள்ளது.

ஆட்கொல்லி நோய்களை பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்புகளை உருவாக்குகிறோம் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் பயன் இல்லை. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த பிளாஸ்டிக் பயன்பாடு சமீபகாலமாக படிபடியாக அதிகரித்து வருகிறது.

சாலையோர வனப்பகுதியில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்

அண்மை க்காலமாக மீண்டும் மாவட்டத்தில் பிளாடிஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது

ரெயில் தண்டவா ளங்கள், குப்பை கிடங்குகள், நீா் நிலைகள் போன்றவற்றில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் கிடப்பதைப் பாா்க்கும்போது நீலகிரியின் சுற்றுச்சூழல் பெருமளவு பாதித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் தற்போது அதிக அளவில் தடைசெய்யபட்ட தண்ணீர் பாட்டில்கள் நீலகிரியில் நுழைகின்றன

அரசு பேருந்துகளில் வரும் சுற்றுலா பயணிகளும் தடை செய்யபட்ட தண்ணீர் பாட்டில்களை கொண்டுவருகின்றனர்

ஊட்டிபேருந்து நிலையத்தில் சிதறிகிடக்கும் தடைசெய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களே இதற்கு சாட்சியாகும்

பல சுற்றுலா தலங்களிலும் தண்ணீர் பாட்டில்கள் சுற்றுலா பயணிகளின் கரங்களில் இருப்பது அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது

எனவே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க பொது மக்கள் தாங்களாக முன் வரவேண்டும்.

அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளா்கள், பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் பிளா ஸ்டிக் சாா்ந்த பொருள்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

இதனை அனைத்து அரசு துறை அலுவல கங்களும் கண்கா ணித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிா்வாகம், நகரா ட்சி, பேரூராட்சி நிா்வாக ங்கள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button