ஊட்டி :ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட. 36 வது வார்டு லவ்டேல் கெரடா லைனில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் இல்லை இதனால் அன்றாட அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் இல்லாமல் சிரமம் அடைந்தனர்
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் இன்று காலையில் காலி குடங்களுடன் லவ்டேல் போலீஸ் ஸ்டேஷன் எதிரே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இருபுறமும் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சம்பவ பகுதிக்கு வந்த போலீசார் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
மறியல் போராட்டத்தால் ஊட்டி – மஞ்சூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.