தொடர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் மயிலாடுதுறை மாதா கோயில் ஆஸ்பத்திரி அருகில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை காவல் ஆய்வாளர், நெடுஞ்சாலை ரோந்து காவலர் மற்றும் காவல் ஆளுநர்கள் நடத்திய தீவிர சோதனையில் இன்று 05.05.24 அதிகாலை 3.30 மணிக்கு 150 லிட்டர் சாராயத்துடன் வந்த கார் பிடிபட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
