பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு எதிரே 05.05.2024-ம் தேதி ரூபாய்.50,000 பணம் தரையில் கிடந்ததை கண்ட அப்பல்லோ மருந்தகத்தில் மருந்தாளுனராக பணிபுரியும் பெரம்பலூர் கவுல்பாளையம், மாதையன் மகன் சூர்யா என்ற இளைஞர் பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவியிடம் ஒப்படைத்தார். கீழே கிடந்த ரூபாய்.50000 பணத்தை நேர்மையாக காவல்துறையிடம் ஒப்படைத்த மேற்கண்ட இளைஞரின் நற்செயலை சிறப்பிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அந்த இளைஞருக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
