ஆண்டுக்கு ஒருமுறை நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி கட்டாயமாக செலுத்த வேண்டும். கடைசியாக செலுத்திய நாளிலிருந்து ஒராண்டு கணக்கிட்டு அடுத்தாண்டு தவணைக்கான ரேபிஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும். அரசு கால்நடை மருத்துவமனைகளிலும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கம்.
சில நாட்களாக தடுப்பூசி இல்லை என்ற புகார்கள் எழுந்தன. கால் நடைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘5 நாட்களாக இல்லை என்பது உண்மைதான் வீட்டு வளர்ப்பு நாய்கள் மட்டுமல்லாது தெருநாய்கள் மட்டும் 800 க்கு மேற்பட்டவற்றிற்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை இருந்த 3000 டோஸ்கள் தீர்ந்து விட்டன. மீண்டும் 2000 டோஸ்களுக்கான அனுமதி கோரி உள்ளோம். ஒரு வாரத்திற்குள் தடுப்பூசிகள் வந்துவிடும் என்றனர்.