மனிதர்கள் காலடி தடம் படாத இடமாக மாறுகிறது மாஞ்சோலை எஸ்டேட். இங்கு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் குத்தகை காலம் முடிவு பெறும் நிலையில். தற்போது மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் மக்களை வனத்துறையினர் வெளியேற்ற முடிவு செய்துள்ளனர்.
இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதி தான் மாஞ்சோலை எஸ்டேட் சுற்றியுள்ள பகுதிகளாகும். மாஞ்சோலை, நாலுமுக்கு ஊத்து, காக்காச்சி, குதிரவெட்டி போன்ற பகுதிகளில் எல்லாம் வனபூமியாக மாற்ற வனத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் எக்காலத்திலும் இந்த பகுதிகள் சுற்றுலா தளமாக மாறாது என்றும் வனத்துறையினர் உறுதியளித்துள்ளனர். வனத்துறையினரின் இந்த முடிவிற்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியிலும் மிகவும் வரவேற்பு கிடைத்து வருகிறது.