சென்னை ஈஞ்சம்பாக்கம் ராஜன்நகர், செல்வா நகர் பகுதிகளுக்கு செல்வதற்காக 40 அடி சாலை இருந்தது. இந்த சாலை ஆக்கிரமிக்கப்பட்டு தனிநபர் ஒருவர் அதில் வீடு கட்டி விட்டார். இதனால் 40 அடி சாலை 12 அடியாக குறுகிவிட்டது. இந்த சாலை ஆக்கிரமிப்பை அகற்ற தெற்கு மண்டல துணை கமிஷனர் அமித் உதவி கமிஷனர் ஒருவரை அழைத்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டார். இப்பணியை கண்காணிக்க தாசில்தார் சரோஜாவை நியமித்தார். இதில் தாசில்தார் சரோஜா தனது லஞ்ச விளையாட்டை தொடங்கினார். இந்நிலையில் ரூ.3 லட்சம் லஞ்சமாக பெறும்போது தாசில்தார் சரோஜா மற்றும் இதற்கு உதவியாக இருந்த பரங்கிமலை குற்றப்பிரிவு போலீஸ்காரர் அருண்குமார் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்
