திண்டுக்கல் வேடசந்தூர் பஸ் நிலைய கட்டிடம் கட்டி 35 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து கொண்டிருந்தது. இதில் ஒரு சிலர் காயம் அடைந்தனர் இதனை அடுத்து வேடசந்தூர் பேரூராட்சியின் சார்பில் புதிய பஸ் நிலைய கட்டிடம் 7கோடி ரூபாய் செலவில் கட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது இந்நிலையில் பழைய பஸ் நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது
