திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அக்ரஹாரம் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனம் சார்பில் சீதா கல்யாண வைபோகம் நிகழ்ச்சி நடைபெற்றது
சீதாவை ராமச்சந்திர மூர்த்தி கரம் பிடித்த திருமண நிகழ்ச்சிகள் நடத்தி வைக்கப்பட்டது.
கன்னியாதானம் மற்றும் மாலை மாற்றும் நிகழ்ச்சிகள் நடந்தன. இறுதியில் யாக வேள்விகளுடன் மந்திரங்கள் முழங்க திருமண நிகழ்ச்சி சரியாக நண்பகல் 12 மணி அளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சீதா கல்யாணத்தை கண்டு களித்தனர்.