பூச்சொரிதல் விழாவிற்கு பூவால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காளியம்மன் மற்றும் பகவதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர் .
பூந்தேரினை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். விழாவிற்கு திண்டுக்கல் மேயர் திருமதி . இளமதி , துணை மேயர்.திரு. ராஜப்பா மற்றும் மாநகராட்சி மாமன்ற உருப்பினர்கள் . அனைத்து மத தலைவர்கள் , அரசாங்க அதிகாரிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பட்டி காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பூந்தேர்
திண்டுக்கல் 4 ரத வீதிகளில் வலம் வந்து மீண்டும் திருக்கோவிலை அடைந்தது . பூந்தேருக்கு முன்பு பக்தர்கள் முளைப்பாரிகள் மற்றும் பூத்தட்டுகள் ஏந்தி நகர் வலம் வந்தனர்.
விழாவை மிகவும் சிறப்பாக விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் இன்று இரவு 8 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் திரைப்பட நடிகை மற்றும் பாடகி பூவிதா வழங்கும் பல்சுவை நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும் என விழாக்குழு கமிட்டியினர் அறிவித்துள்ளார்கள்.