திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அவரது கழுத்தில் அணிந்திருந்த செயினை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்றனர். தகவலறிந்து கொள்ளையர்களை விரட்டிச் சென்ற நத்தம் போலீசார் கோபால்பட்டி அருகே கொரசினம்பட்டி பிரிவு சாலையில் மடக்கி பிடித்த போது கொள்ளையர்களில் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டு இரத்த காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இரு பெரும் சம்பவங்கள் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நத்தத்தை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறி வருகின்றனர்.
