நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கேரள மாநிலம் வயநாடு செல்லும் கைதொல்லி சாலையின் ஓரத்தில் விரிசல் ஏற்பட்டு, சுமார் 10 அடி நீளத்திற்கு தடுப்போடு சாலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.
இருப்பினும் போக்குவரத்தானது அனுமதிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் மணல் மூட்டைகள் வைத்து சிவப்பு நிற ரிப்பன்கள் கட்டப்பட்டுள்ளன. வாகன ஓட்டுநர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.