திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெரியபட்டி பகுதியில் கோழிப்பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வரும் பாரிச்சாமி(45) இவரது மனைவி பரிமளா(40) இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உட்பட 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பரிமளாவின் கள்ளக்காதலை கணவர் பாரிச்சாமி கண்டித்ததால் மனைவி கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்ததில் கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில் வேடசந்தூர் காவல்துறையினர் எதுவும் தெரியாதது போல் நடித்த மனைவியை குறிவைத்து பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
