அரசியல்கோக்கு மாக்குக்ரைம்செய்திகள்விமர்சனங்கள்
Trending

அங்கன்வாடி மையத்தை பார் போல பயன்படுத்திய திமுக பிரமுகரின் மகன் – 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

வேலூர்: அங்கன்வாடியில் மது குடித்த திமுக பிரமுகர் மகன் – குறைந்த தொகை அபராதம் விதிக்கும் 3 பிரிவுகளில் வழக்கு!

வேலூர் அருகே அங்கன்வாடி மையத்துக்குள் மது குடித்துகேங்ஸ்டர்’ தோரணையில் ஆட்டம் போட்ட தி.மு.க ஒன்றியச் செயலாளரின் மகன்மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தி.மு.க-வில், வேலூர் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் சி.எல்.ஞானசேகரன். இவரது மனைவி அமுதா, வேலூர் ஒன்றியக் குழுத்தலைவராக உள்ளாட்சிப் பதவி வகிக்கிறார். இவர்களது மகன் சரண் தனது நண்பர்களுடன் சேர்ந்து அலமேலுமங்காபுரம் அருகேயுள்ள வெங்கடாபுரம் அங்கன்வாடி’ மையத்துக்குள் புகுந்து மது குடித்து சிகரெட் புகைத்து... பட்டாக் கத்திகளுடன்கேங்ஸ்டர்’ தோரணையில் வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
ஃபகத் பாசிலின் ஆவேஷம்’ படத்தில் வரும்இலுமினாட்டி’ பாடலுக்கு அந்தக் கும்பல் ஆட்டம் போட்டிருந்தது. வகுப்பறை பலகை பின்னால் தெரியும் அளவுக்கு புகை விட்டுக்கொண்டு குடியும், ஆட்டமுமாக இருந்திருக்கின்றனர்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கக்கூடிய அரசுக்குச் சொந்தமான அங்கன்வாடி மையம் என்பதால் தி.மு.க பிரமுகரின் மகன் வில்லங்கத்தில் சிக்கினார். உள்ளூர் பகுதி மக்களிடையேயும் கடும் கொதிப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில், அங்கன்வாடி மையத்துக்குள் அத்துமீறி தகாத செயல்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில், தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஞானசேகரனின் மகன் சரண் மீது மதுபோதையில் பொது இடத்தில் தவறாக நடந்துகொண்டதற்காக 10 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதிப்பதற்கான ஐ.பி.சி 510, 290, 448 ஆகிய சாதாரண 3 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button