விழுப்புரம் மாவட்டம் , விழுப்புரம் இணை சார்பதிவாளர் II அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்ய பொதுமக்களிடம் இலஞ்சம் அதிகளவில் பெறப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் , விழுப்புரம் மாவட்ட இலஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் ஈஸ்வரி அவர்களின் தலைமையிலான காவல் குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அச்சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 1,80,040/- கைப்பற்றினர்.மேலும் இதுகுறித்து சார்பதிவாளர் தையல் நாயகி உட்பட 8 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்கு விசாரணை தொடந்து நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்க ளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்களையும் வெளியிட்டுள்ளனர்.
DSP-9994898628
INS-9498144910
SI-9498154528