திண்டுக்கலில் சிறுவர்கள் இயக்கிய 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் பெற்றோர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி எச்சரிக்கை.
மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மருத்துவர். திரு பிரதீப் அவர்களின் உத்தரவின் பெயரில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு சிபின் அவர்களின் அறிவுரை படியும், போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சணாமூர்த்தி, உதவி ஆய்வாளர் திலிப் குமார் தலைமையிலான போக்குவரத்து போலீசார் திண்டுக்கல் நகரில் அதிக அளவில் சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கப்படுவதாகவும் கிடைத்த தகவலை தொடர்ந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 10க்கும் மேற்பட்ட இளம் சிறார்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன ஓட்டிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும் மேலும் 18 வயது உட்பட்ட சிறுவர்களிடம் இனி எக்காரணம் கொண்டும் வாகனத்தை கொடுக்ககூடாது என்றும் மீறி கொண்டுக்கும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என பெற்றோர்களை எச்சரித்தார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு தட்சிணாமூர்த்தி இவரின் இந்த செயல் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது