திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி உள்ளது. மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் வழியாக வந்து மணிமுத்தாறு அருவியில் கொட்டுகிறது.
தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.ஆண்டு முழுவதும் இங்கு ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருப்பதினால் சுற்றுலாப் பயணிகளின் வருகை எப்பொழுதுமே இருக்கும்.
கோடை விடுமுறைக்கு மணிமுத்தாறு வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்து வந்த நிலையில், குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாகப் பழைய குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிமுத்தாறு அருவியில் மக்கள் குளிக்கத்தடை விதிக்கப்பட்டது.