திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிலுவத்தூர் கிராமத்தில் திருவிழாவினை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
ஆரம்பம் முதலே அதிகப்படியான ஒளி மற்றும் ஒலியுடன் பாட்டு இசைக்க அதற்கு ஏற்றவாறு குழுவை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் பொதுமக்கள் மத்தியில் மேடையில் ஆடி வந்தனர் .
பின்னர் நேரம் ஆக ஆக அரைகுறை ஆடையுடன் பாடல்களுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆடல் பாடல் நிகழ்ச்சியை காண்பதற்காக அமர்ந்திருந்த நிலையில் முகம் சுளிக்கும் வகையில் ஆபாச நடனம் ஆடிய சம்பவம் சம்பவம் வேதனையின் உச்சம் என்றே கூறலாம்.
மேலும் கிளாமர் டான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை மாற்று வழிக்கு அழைத்துச் செல்லும் வகையில் நடத்தப்படும் இது போன்ற நிகழ்ச்சிகளால் சமுதாயம் பெரும் சீர்கேட்டை சந்தித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்