கோவை உக்கடம் அருகே உள்ள லாரி பேட்டையில் ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக மீன்கள் வாங்க வருவது வழக்கம். குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலை முதல் மதியம் வரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த மீன் மார்க்கெட்டிற்கு வருவர்.
இந்த நிலையில், ராமநாதபுரம் பகுதியில் வசித்து வரும் ரஞ்சிதம் என்பவர் மார்க்கெட்டிற்கு வரும்போது, மர்ம நபர் ஒருவர் திட்டமிட்டபடி அவரது கழுத்தில் இருந்து சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெரிய கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.