பழனி கவுண்டர் இட்டேரி சாலையில் ஸ்டார் மஹால் முதல் பாலாஜி மில் சாலை முடிவு வரை இரு புறங்களிலும் சாக்கடை கழிவுகள் சாக்கடையில் இருந்து அள்ளி கொட்டப்பட்டுள்ளது.
சாக்கடை ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் ஐந்து நாட்களுக்கும் மேல் அல்லப்படாமல் அலட்சியம் காட்டும் பழனி நகராட்சி நிர்வாகம்.
சாலை ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள சாக்கடை மற்றும் கோழி இறைச்சி கழிவுகளில் இருந்து துர்நாற்றம் அந்தப் பகுதி முழுவதும் வீசி வருகிறது.
சாக்கடை கழிவுகளில் இருந்து தூசிகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் படுகிறது.
இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயமும் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் நிலவு வருகிறது.
பழனி நகரின் நலனை தவறவிட்ட நகராட்சி நிர்வாகம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.