சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடமலைபாளையம் கிராமத்தில் வைகாசி விசாகத்தன்று முருகன் கோவிலில் மதிய நேரத்தில் உச்சிக்கால பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த மயில் ஒன்று கருவறையில் நுழைவு வாயிலேயே பூஜை முடியும் வரை சிலை போல நின்று முருகனை தரிசனம் செய்த காட்சி பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது. அந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.